நாடாளுமன்றத்தின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8ஆம் தேதியான இன்று தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று, வெங்கையா நாயுடு தலைமையில் கூடிய அமர்வில், மகளிர் நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பேசிய பாஜக எம்பி சோனல் மன்சிங், "சர்வதேச பெண்கள் நாள் கொண்டாடப்படும் இன்று, சர்வதேச ஆண்கள் நாளும் கொண்டாட வேண்டும் என்று நான் கோரிக்கைவிடுக்கிறேன்" என்றார்.
இதற்கு அரங்கத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. ஏனென்றால், சர்வதேச ஆண்கள் நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய அவர், "பெண்ணாக இருப்பது கடினம். நீங்கள் ஒரு மனிதனைப் போல சிந்திக்க வேண்டும், ஒரு பெண்ணைப் போல நடந்துகொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்க வேண்டும்" எனக் கோரினார்.
இதையும் படிங்க: '75ஆவது சுதந்திர தினம் சனாதன இந்தியாவின் பெருமையை பிரதிபலிக்கும்' - பிரதமர் மோடி