ETV Bharat / bharat

சர்வதேச ஆண்கள் தினம் - ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியம்! - ஆண்கள் தினம் 2020

பாலின உறவு மேம்பாடு, பாலின சமத்துவம், ஆண் முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவது, ஆண்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியம் (Better health for men and boys) என்ற தலைப்பில் இந்தாண்டு ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

International Men's Day
International Men's Day
author img

By

Published : Nov 19, 2020, 6:49 AM IST

தந்தையாக, சகோதரனாக , மகனாக, கணவனாக, தோழனாக நம் வாழ்வில் முக்கிய பங்காற்றும் ஆண்களை கொண்டாடும் வகையில் இந்தியா உள்பட 80க்கும் மேற்பட்ட நாடுகளில் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த உலகில் ஆண்களின் பங்கை கொண்டாடும் வகையிலும் சமூகத்தில் ஆண்களும் சிறுவர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச ஆண்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாலின உறவு மேம்பாடு, பாலின சமத்துவம், ஆண் முன்மாதிரிகளை முன்னிலைப்படுத்துவது, ஆண்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி, “ஆண்களுக்கும் சிறுவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியம் (Better health for men and boys) என்ற தலைப்பில் இந்தாண்டு ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஆண்கள் தின வரலாறு

சர்வதேச ஆண்கள் தினம் முதலில் 1992ஆம் ஆண்டு தாமஸ் ஓஸ்டர் என்பவரால் முன்மொழியப்பட்டது. ஓர் ஆண்டிற்கு பின், ஆண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

1999ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் 19ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டிலுள்ள மேற்கிந்திய தீவுகள் பல்கலைக்கழகத்தின் வரலாற்று விரிவுரையாளர் டாக்டர் ஜெரோம் டீலுக்கிங் என்பவர் இந்த தேதியை முன்மொழிந்தார்.

டாக்டர் ஜெரோம் டீலுக்கிங்கின் தந்தை நவம்பர் 19ஆம் தேதி பிறந்தவர். மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் 1989இல் இதே நவம்பர் 19ஆம் தேதிதான் டிரினிடாட் மற்றும் டொபாகோ நாட்டு மக்களை கால்பந்து மூலம் நாட்டை ஒன்றிணைத்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.

ஆண்கள் தினத்தை வெறும் கொண்டாட்டமாக மட்டும் பார்க்காமல், உலகெங்கும் உள்ள ஆண்களும் சிறுவர்களும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேசும் நாளாக இந்நாளை முன்னெடுக்க டாக்டர் டீலூக்ஸிங் விரும்பினார். மேலும் ஆண்கள் தினம் கொண்டாடப்படும் நவம்பர் 19, எதேர்ச்சையாக மூவ்ம்பருடன் ஒத்துப்போகிறது.

அதாவது இந்த மாதம் (நவம்பர்) முழுவதும் ஆண்கள் முடிகளை வெட்டாமலும் தாடிகளை ஷேவ் செய்யாமலும் இருந்து, அதன் மூலம் சேகரிக்கும் பணத்தை ஆண்களின் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்துவார்கள்.

இந்தியாவில் சர்வதேச ஆண்கள் தினம்

இந்தியாவில் முதன்முதலில் 2007ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள ஆண்களின் அர்ப்பணிப்பை போற்றும் வகையில் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.

இந்தியாவில் ஆண்கள் தினம் பெரியளவில் கொண்டாடப்படுவது இல்லை. இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாகவே இந்நாள் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து பொதுவெளியில் பேசவும் அவர்களின் உரிமைகள் குறித்து குரலெழுப்பவும் மக்களை ஊக்குவிக்கின்றன.

பாலின சமத்துவம் பேசும் உலகில் சர்வதேச ஆண்கள் தினத்தின் முக்கியத்துவம்

  • சமூகம், குடும்பம், குழந்தை பராமரிப்பு ஆகியவற்றின் ஆண்களின் பங்களிப்பைக் கொண்டாடுவது.
  • ஆண்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் கவனம் செலுத்துவது.
  • ஆண்களுக்கு எதிரான பாகுபாட்டை முன்னிலைப்படுத்துவது.
  • பாலின உறவுகளை மேம்படுத்தவும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும்

ஆண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சமூக பிரச்னைகள் குறித்த புள்ளிவிவரங்கள்:

ஆண்கள் தற்கொலை

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளின் படி 2019ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவர்களில் 70.2 விழுக்காடு ஆண்கள், 29.8 விழுக்காடு பெண்கள். மேலும், தற்கொலை செய்துகொண்ட ஆண்களில் சுமார் 68.4 விழுக்காடு திருமணம் ஆனவர்கள்.

போதை மருந்து மற்றும் மதுவால் ஏற்படும் மரணம்

இந்தக் காரணங்களால் தற்கொலை செய்து கொண்டவர்களில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் ஆண்கள். 2019 ஆம் ஆண்டில், போதைப்பொருள் மற்றும் மது அடிமையாதல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மொத்த 7860 பேரில் 7719 பேர் ஆண்கள்.

இது தற்கொலை செய்துகொண்டவர்களில் 98.2 விழுக்காடாகும். 2010 முதல் 2019 வரையிலான 10 ஆண்டுகளில் இதுதான் அதிகம். உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, மதுவால் ஏற்படும் உடல் நலக்கோளாறு மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவது ஏற்படும் சாலை விபத்துகள் ஆகியவை காரணமாக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 2.6 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர்.

ஆயுள் காலம்

2013-17 ஆம் ஆண்டிற்கான மாதிரி பதிவு கணக்கெடுப்பின்படி, மனிதர்களின் ஒட்டுமொத்த ஆயுட்காலம் 69 வயதாகும். அதில் பெண்களின் ஆயுட்காலம் 70.4 ஆண்டுகள் என்றும் ஆண்களின் ஆயுட்காலம் 67.8 ஆண்டுகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்களின் ஆயுட்காலம் எப்போதும் பெண்களை விட குறைவாகவே இருக்கும்.

திருமண வயதில் இருக்கும் கூடுதல் ஆண்கள்

1,000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் உள்ளனர் என்பதை வைத்து கணக்கிடும் இந்தியாவின் மொத்த பாலின விகிதம், கடந்த 20 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 80 ஆண்டுகளாக இது மிக மோசமான நிலையில் இருந்தது.

2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 940 பெண்கள் இருந்தனர். இது 2001இல் 933 ஆக இருந்தது. ஆனால், மக்கள்தொகை வளர்ச்சி, பெண் குழந்தை என்றால் கருவிலேயே கொல்லப்படும் கொடூரம் ஆகியவற்றால், இந்தியச் சமூகத்தில் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்தியாவில் 15 முதல் 35 வயதிற்குள் மட்டும் சுமார் மூன்று கோடி கூடுதல் ஆண்கள் இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. பெண்களுக்கு பற்றாக்குறை இருக்கும் திருமண சந்தையில் இருக்கும் அதிகப்படியான ஆண்களின் பண்புகள் எளிதாகவும் துல்லியமாகவும் கணிக்கப்படுகின்றன.

அவ்வாறு அதிகப்படியாக உள்ள ஆண்கள் மிகவும் பின்தங்கிய பொருளாதார வகுப்பிலிருந்தும் வேலை இல்லாதவர்களாகவும் உள்ளனர். மொத்தத்தில், இந்த கூடுதல் இளம் ஆண்களை சமூகம் தோல்வியுற்றவர்களாகவே கருதுகிறது.

மேலும், திருமணமான ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. திருமணம் ஆகாத ஆண்களுக்கு அதிகளவில் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பதால் சமூக விரோத நடவடிக்கைகளில் இதுபோன்ற ஆண்களே அதிகம் ஈடுபடுகின்றனர்.

ஆண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் கரோனா தொற்று

ஆண்கள் மற்றும் பெண்களிடம் கரோனா பாதிப்பு வேறுவேறாக உள்ளது. கரோனாவால் அதிகம் ஆண்களே உயிரிழக்கின்றனர். பாலினம் மற்றும் இன சிறுபான்மையினர் அதிகம் கரோனாவால் பாதிக்கப்படுவது முக்கியமானதாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்தக் கரோனா தொற்று பாலின வேறுபாடுகள் ஆண்களை எவ்வாறு அதிகம் பாதிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

புகைப்பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்டவை காரணமாகவும் முகக்கவசம் (மாஸ்க்) அணிவது, கைகளை முறையாக கழுவுவது ஆகியவற்றை ஆண்கள் முறையாக பின்பற்றாததால் ஆண்களிடம் குறைந்த அளவே நோயெதிர்ப்பு சக்தி உள்ளது. இதனால்தான் ஆண்கள் அதிகளவில் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக இதய நோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் இருக்கும். இதனாலும் கரோனாவால் ஆண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதுபோன்ற காரணங்களாலும் மேலும் சில காரணங்களாலும் ஆண்களின் ஆயுள்காலம் கணிசமாக குறைகிறது.

வேலை தொடர்பான மனஅழுத்தம்

பாதிக்கும் மேற்பட்ட ஆண்கள் வேலை தொடர்பான மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் சிலர் தங்களின் மன அழுத்தம் நிர்வகிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

பொதுவாக அலுவலங்களுக்கு நாம் செல்லும்போது மனஅழுத்தம் குறித்து விவாதிப்போம். மேலும், இதுபோன்ற அழுத்தத்தை அனைவரும் எதிர்கொள்வதை அவ்வாறு விவாதிக்கும்போதுதான் நாம் தெரிந்துகொள்வோம். ஆனால், கரோனா போன்ற பெருந்தொற்றின் காரணமாக அலுவலகம் செல்வது நடக்காது ஒரு காரியமாகிவிட்டது.

சர்வதேச ஆண்கள் தினத்தில் ஆண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய பாடங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்பிக்க ஊக்குவிக்கிறது. “நாம் விரும்பும் மாற்றமாக நாம் முதலில் இருக்க வேண்டும்” என்றார் மகாத்மா காந்தி.

ஆண்களும் பெண்களும் சரிசமமாக வாழ்வை நடத்தி, அதில் அனைவருக்கும் செழிப்பான வாய்ப்பை கிடைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.