ETV Bharat / bharat

பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு: மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு - Supreme Court

Ponmudi Case: சொத்துகுவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் 30 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Interim stay for Ponmudi appealed to the Supreme Court against the Madras High Court order
பொன்முடிக்கு எதிரான 3 ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்காலத் தடை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2024, 2:50 PM IST

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் அவகாசமும் வழங்கி இருந்தது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் தண்டனைக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த செய்தி தொடர்பான கூடுதல் விவரங்களை ஈடிவி பாரத் செய்திக் குழு விரைவில் அப்டேட் செய்யும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.