இந்த கப்பல் நேற்று கென்யாவின் மொம்பசா துறைமுகத்திற்கு சென்றடைந்ததாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இயற்கை பேரழிவுகள் மற்றும் கரோனா தொற்றுநோயை சமாளிக்க நட்பு வெளிநாடுகளுக்கு இந்திய அரசு உதவி வழங்குகிறது.
ஐ.என்.எஸ். ஐராவத் கப்பலில் தெற்கு சூடான் மக்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான உணவுகள் கொண்டுசெல்லப்பட்டன. மிஷன் சாகர் -2 இன் கீழ் கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஐ.என்.எஸ் ஐராவத் சூடான், தெற்கு சூடான் ஜிபூட்டி மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகளுக்கு உணவு உதவிகளை வழங்கிவருகிறது.
மே-ஜூன் 2020 இல் மேற்கொள்ளப்பட்ட முதல் மிஷன் சாகரைப் தொடர்ந்து தற்போது மிஷன் சாகர்- II செயல்படுத்தப்படுகிறது. அதில் மாலத்தீவுகள், மொரீஷியஸ், சீஷெல்ஸ், மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் ஆகிய நாடுகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை இந்தியா வழங்கியது.
‘பாதுகாப்பு, வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் பிற நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இந்திய கடற்படை இந்தப் பணியை முன்னெடுத்துவருகிறது.