ETV Bharat / bharat

கரோனா நிவாரணப்பொருட்களுடன் விசாகப்பட்டினம் வந்தடைந்த ஐ.என்.எஸ் ஐராவத் - சிலிண்டர்கள்

திரவ ஆக்ஸிஜன், சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கரோனா கால நிவாரணப்பொருட்களை உள்ளடக்கிய ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல், சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து நேற்று (வியாழக்கிழமை) விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வருகை புரிந்தது.

கரோனா நிவாரணப்பொருட்களுடன் விசாகப்பட்டினம் வந்தடைந்த ஐஎன்எஸ் ஐராவத்

author img

By

Published : Jun 4, 2021, 11:03 AM IST

விசாகப்பட்டினம்(ஆந்திரப் பிரதேசம்): கரோனாவிற்கு எதிராக நடைபெற்றுவரும் போர்க்கால நடவடிக்கைகளில் 'சமுத்ரா சேது 2' என்னும் செயல்பாடுகளின் மூலம் இந்திய கப்பற்படை நாட்டிற்கு சேவை ஆற்றி வருகிறது. அதன்படி, திரவ ஆக்ஸிஜன், சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட கரோனா கால நிவாரணப்பொருட்கள் உள்ளடங்கிய ஐ.என்.எஸ். ஐராவத் கப்பல் நேற்று(வியாழக்கிழமை) விஷாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து வருகை புரிந்தது.

"விசாகப்பட்டினத்திற்கு வருகைபுரிந்த ஐ.என்.எஸ் ஐராவத் கப்பலில், 7 கிரயோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்குகளில் 158 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனும்; 2 ஆயிரத்து 722 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும், 10 வென்டிலேட்டர்களுடன் கூடிய நிவாரணப்பொருட்களும் வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வருகை தந்துள்ளது'', என இந்தியன் கப்பற்படை அலுவலர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மே 10ஆம் தேதி, ஐ.என்.எஸ் ஐராவத் கப்பலானது சிங்கப்பூரிலிருந்து 4,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 8 கிரயோஜெனிக் ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் நிவாரண மருந்துகளுடன் விசாகப்பட்டினம் வந்தடைந்தது.

அதேபோல், கடந்த மே 24ஆம் தேதி ஐ.என்.எஸ் ஷர்துல் கப்பல் கொச்சிக்கு 80 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடம் ஐ.என்.எஸ் தர்காஷ் கப்பல் மும்பைக்கு 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனுடனும் கத்தாரிலிருந்து வந்து இறங்கியது.

கரோனா தொற்று அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு ஆக்ஸிஜன் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், தற்போதைய தேசியப் பணியை அதிகரிக்கவும் கப்பற்படை சமுத்ரா சேது -2 என்னும் ஆப்ரேஷனை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பூச்சி ப்ரை: போட்டி போட்டு ருசிக்கும் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.