ETV Bharat / bharat

"கிரீன் சிக்னல் கிடைத்த பிறகே ரயிலை இயக்கினேன்" - கோரமண்டல் விரைவு ரயில் ஓட்டுநர்!

சிக்னல் கிடைத்த பின்னரே கோரமண்டல் விரைவு ரயிலை இயக்கியதாகவும் எந்த நேரத்தில் சிக்னலை மீறி ரயிலை இயக்கவில்லை என கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநர் தெரிவித்ததாக ரயில்வே வாரிய உறுப்பினர் தெரிவித்து உள்ளார்.

Varma
Varma
author img

By

Published : Jun 4, 2023, 7:14 PM IST

டெல்லி : ஒடிசா மூன்று ரயில்கள் விபத்து சம்பவத்தில் உயிர் பிழைத்த கோரமண்டல் விரைவு ரயிலின் ஓட்டுநர், கிரின் சிக்னல் கிடைத்த பின்னரே ரயிலை இயக்கியதாக தெரிவித்ததாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்து உள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோரில் கடந்த ஜூன் 2ஆம் தேதி இரவு சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் தடம் புரண்டு கிடந்த ரயில் பெட்டிகளில் மோதி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 270க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், எலக்ட்ரானிக் இண்டர்லாக்கிங் முறையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து எற்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

விரைவில் விபத்துக்கான முழு காரணம் கண்டறியப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது. விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பிரதமர் மோடி, மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ள படுகாயம் அடைந்தவர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், விபத்தில் உயிர் பிழைத்த கோரமண்டல் ரயிலின் ஓட்டுநர், தான் கிரீன் சிக்னல் விழுந்த பின்னரே ரயிலை இயக்கியதாக தெரிவித்ததாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா தெரிவித்து உள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சரக்கு ரயிலில் இரும்பு பாரம் ஏற்றப்பட்டு இருந்ததாகவும் அதனால் தான் கோரமண்டல் விரைவு ரயில் மோதிய போதும் சரக்கு ரயில் பெட்டிகள் தடம்புரளவில்லை என்றும் தெரிவித்து உள்ளார்.

மேலும், இரும்பு பாரம் ஏற்றிய சரக்கு ரயில் மீது மோதியதன் காரணமாக கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் தடம்புரண்டதாகவும் கடும் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இரும்பு பாரம் ஏற்றியதான் காரணமாகவே சரக்கு ரயில் தடம் புரளவில்லை என்றும் அதுவே அதிகளவிலான சேதம் மற்றும் உயிரிழப்புக்கு காரணம் என தெரிவித்தார்.

சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் அடுத்த இருப்பு பாதையில் வந்த மணிக்கு 126 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற யஷ்வந்த்பூர் விரைவு ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகளில் மோதியதாக அவர் கூறினார். சிக்னலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறிய அவர், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் விரிவான அறிக்கையை எதிர்பார்த்து இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க : Odisha Train Accident : உயிரிழந்தவர்களை தேடி அலையும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.