ETV Bharat / bharat

பார்வையற்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் வேலை பெற்று சாதனை - மைக்ரோசாஃப்டில் வேலை

பார்வையற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 47 லட்சம் ரூபாய் ஆண்டு வருமானத்தில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார்.

indore-
indore-
author img

By

Published : Aug 30, 2022, 10:06 PM IST

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பார்வையற்ற பொறியியல் பட்டதாரியான யாஷ் சோனகியா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பெற்று சாதனை படைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு இந்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டம் பெற்ற யாஷ் சோனகியா, 47 லட்சம் ஆண்டு வருமானத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பெற்றுள்ளார்.

சாதனை மாணவர் யாஷை கல்லூரி நிர்வாகம் நேரில் அழைத்து பாராட்டியுள்ளது. அந்த கல்லூரியில் அதிகளவு ஆண்டு வருமானத்தில் வேலை பெற்ற மாணவர் யாஷ்தான் என்று கல்லூரி நிர்வாகிகள் பெருமிதம் தெரிவித்தனர்.

சிறுவயதிலேயே கண் பார்வையை இழந்த யாஷ், விடாமுயற்சியுடன் படித்து பொறியியல் பட்டம் பெற்றதோடு, மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுனத்திலும் வேலை பெற்றுள்ளார். யாஷின் இந்த சாதனை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

இதையும் படிங்க:நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுநர் உரிமம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.