ETV Bharat / bharat

இந்தியா வரவேண்டிய இண்டிகோ பாகிஸ்தானில் தரையிறங்கியது ஏன்?

மருத்துவ அவசரநிலை காரணமாக சார்ஜாவிலிருந்து லக்னோ வரவேண்டிய விமானம் பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது.

IndiGo
இன்டிகோ
author img

By

Published : Mar 2, 2021, 2:49 PM IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்ஜா நகரிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்துகொண்டிருந்த 6E 1412 இண்டிகோ விமானம் திடீரென பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்த பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து விமானி உடனடியாக வழித்தடத்தை மாற்றி, கராச்சியில் அவசர அவசரமாகத் தரையிறக்கினார். விமான நிலைய மருத்துவர் பயணியைப் பரிசோதித்ததில் உயிரிழந்துவிட்டார் எனத் தெரியவந்துள்ளது.

தனது விமானத்தில் பயணித்தவர் உயிரிழந்தது வருத்தம் தெரிவிப்பதாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல் எனவும் இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. உரிய நடவடிக்கைகளுக்குப் பின்னர் மீண்டும் விமானம் லக்னோ நோக்கிப் புறப்பட்டது.

இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: இந்தியாவில் புதிதாக 12,286 பேருக்கு பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.