டெல்லி: உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் தடுப்பூசி மருந்துகள், ஆக்ஸிஜன், மருத்துவமனை படுக்கைகள் போன்றவைக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றன.
நேற்று (மே 9) ஒருநாளில் மட்டும் இந்தியா முழுவதும் 4,03,738 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 4,092 ஆக உயர்ந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை, 2 கோடியே 20 லட்சம் மக்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் இதனால் மரணமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரின் சுடுகாட்டில் பணிபுரியும் ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு நாளும் பிணங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது' என்றார். இது கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
மத்திய அரசின் கரோனா தடுப்பூசி பரப்புரையானது உச்சத்தில் இருந்த ஜனவரி மாதத்தில், நாட்டின் தொற்று பாதிப்பு குறைவாகவும், தடுப்பூசி ஏற்றுமதி அதிகமாகவும் இருந்தது, தற்போது ஏற்றுமதி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவரை, இந்திய மக்கள் தொகையில் 10 சதவீத மக்கள் முதல்முறை தடுப்பூசியையும், 2.5 சதவீத மக்கள் இரண்டாவது முறை தடுப்பூசியையும் எடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மாநிலங்களுக்கு 9 லட்சம் கூடுதல் தடுப்பூசிகள்’ - மத்திய அரசு