ஹைதராபாத்(தெலங்கானா): கரோனாவினால் இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்பது உண்மையான பாதிப்பைக் காட்டாத வண்ணம் உள்ளது என்று ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஓவைசி, 'இந்தப் பகுதி நான் சொல்லிக்கொண்டிருப்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. கரோனாவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இறப்பு எண்ணிக்கை எங்கும் உண்மையான சேதத்திற்கு அருகில் இல்லை.
தன்னை நன்றாக உணர அரசாங்கம் எவ்வளவு காலம் எடுக்கும்? அன்பானவரை இழந்த குடும்பங்கள் கணக்கிடப்பட வேண்டியவை' என்று ஓவைசி ட்வீட் செய்துள்ளார்.
இந்தியாவின் கரோனா இறப்புகள் அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டதை விட மிக அதிகம் என்று கூறிய ஒரு கட்டுரையையும் அவர் பகிர்ந்து கொண்டார்.
கரோனா தொற்று இறப்புகள் குறித்த அரசாங்கத்தின் தரவு சரிபார்க்கப்படவில்லை என்று கூறி, கரோனா உயிரிழப்புகள் குறித்த ஒவ்வொரு ஆய்வும் பதிவு செய்யப்படாத மரணங்களை சுட்டிக்காட்டுவதாக ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பரவல் தணியும் வரை கட்டுப்பாடுகளைத் தொடரவும் - நீதிபதிகள்