நாட்டில் கடந்த ஒருநாளில் 14 ஆயிரத்து 623 பேருக்குப் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு மூன்று கோடியே 41 லட்சத்து எட்டாயிரத்து 996 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 197 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 52 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 98 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 41 லட்சத்து 36 ஆயிரத்து 142 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா நூறு கோடி டோஸ் தடுப்பூசி இலக்கை நெருங்கியுள்ளது. இதுவரை மொத்தம் 99 கோடியே 48 லட்சத்து 51 ஆயிரத்து 981 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
70 கோடியே 38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசியும், 29 கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். நூறு கோடி தடுப்பூசி டோஸ்கள் என்ற இலக்கை இந்தியா நாளைக்குள் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு