டெல்லி : ஒன்றிய கல்வி மற்றும் திறன் வளர்ச்சித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Dharmendra Pradhan) சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்தியாவின் ஆதார சக்தி ஞானம், கோவிட் பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகில் நாட்டின் இருப்பை வலுப்படுத்திக் கொள்ள கல்வி அவசியம்” என்றார்.
இதையடுத்து தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) குறித்து பேசினார். அப்போது தர்மேந்திர பிரதான், “தரமான கல்வி நிறுவனங்கள், பன்முக கலாசாரத்துடன் கூடிய சமூக உள்ளடக்கம் மற்றும் புதுமை, தொழில்முனைவு மற்றும் சர்வதேசமயமாக்கலில் கவனம் செலுத்துதல் ஆகியவை தேசிய கல்வி முறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்” என்றார்.
-
Addressed the diplomatic conclave organised by @Chandigarh_uni. Happy to note that the conclave is represented by more than 120 countries. pic.twitter.com/6rcLSpdKar
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Addressed the diplomatic conclave organised by @Chandigarh_uni. Happy to note that the conclave is represented by more than 120 countries. pic.twitter.com/6rcLSpdKar
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 12, 2021Addressed the diplomatic conclave organised by @Chandigarh_uni. Happy to note that the conclave is represented by more than 120 countries. pic.twitter.com/6rcLSpdKar
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 12, 2021
தொடர்ந்து நாட்டின் பழங்கால நம்பிக்கையை சுட்டிக் காட்டிய தர்மேந்திர பிரதான், “உலகமே ஒரே குடும்பம் (Vasudhaiva Kutumbukam). நாம் உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு பொதுவான இலக்குகளை எட்டிப் பிடிக்க ஒன்றாக இணைந்து உலக மக்களுக்காக உழைக்க வேண்டும்” என்றார். இந்தக் கருத்தரங்கில் 120க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டார்கள்.
இதையும் படிங்க : மாற்றத்தை நோக்கிய பாதையில் புதிய கல்விக் கொள்கை - தர்மேந்திர பிரதான்