ETV Bharat / bharat

ஸ்ரீஹரிக்கோட்டாவில் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் திறப்பு! - இஸ்ரோ தலைவர்

சென்னை ஐஐடியின் அக்னிகுல் காஸ்மோஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Indias
Indias
author img

By

Published : Nov 29, 2022, 8:45 PM IST

சென்னை: சென்னை ஐஐடியின் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோஸ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில், இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளத்தை உருவாக்க தொடங்கியது. இதில், 2 ஏவுதள பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. அக்னிகுல் ஏவுதளம் (ஏஎல்பி) மற்றும் அக்னிகுல் மிஷன் கட்டுப்பாட்டு மையம் (ஏஎம்சிசி) அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தனியார் ராக்கெட் ஏவுதளத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோம்நாத் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், "இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் தனியார் ராக்கெட் ஏவுதளம் அமைந்துள்ளது. இப்போது இந்தியா மேலும் ஒரு ஏவுதளத்திலிருந்து ராக்கெட்டுகளை அனுப்ப முடியும். இந்த இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் அனைத்து முக்கியமான அமைப்புகளும் ஒன்றுக்கொன்று 4 கி.மீ தொலைவில் உள்ளவை. கவுண்ட் டவுன் வசதிகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ஏவுதளம் குறிப்பாக திரவ நிலை-கட்டுப்படுத்தப்பட்ட ஏவுகணைகளை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இது தேவைக்கேற்ப, இஸ்ரோவின் பணிக் கட்டுப்பாட்டு மையத்துடன் தரவு மற்றும் பிற முக்கியமான தகவல்களைப் பகிர உதவும். அக்னிகுல் ஏவுதளத்திலிருந்து வரும் மாதங்களில் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக சோதனை அடிப்படையில் முதலில் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

அக்னிகுல் காஸ்மோஸ் இணை நிறுவனர் மொயின் கூறும்போது, "அக்னிகுல் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவிற்குள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இது இஸ்ரோ மற்றும் இன்-ஸ்பேஸின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. விண்வெளித் துறையில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சீர்திருத்தங்கள், விண்வெளிக்கு செல்ல வேண்டும் என்கிற அனைவரது கனவும் சாத்தியமாக உதவும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தெலங்கனா முதல்வர் வீடு முற்றுகை: ஆந்திர முதல்வரின் சகோதரி கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.