புனே: மகாராஷ்டிரா மாநிலம் எம்ஐடியின்(MIT) மெக்கானிக்கல் துறை இறுதியாண்டு மாணவர்கள், இந்தியாவின் முதல் மின்சார தானியங்கி நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளனர்.
இதனை மாணவர்கள் யஷ் கேஷ்கர், சுதன்சு மானேரிகர், தமாகிள் சுபாங் குல்கர்னி, ப்ரத்யக்ஷா பாண்டே, பிரேர்னா கோலிபகா ஆகியோர் இணைந்து தயார் செய்திருக்கின்றனர். இந்த வாகனம் செயற்கை நுண்ணறிவு(AI) மூலம் இயங்குகிறது.
அதற்காக வாகனத்தில் கேமராக்கள், நுண்செயலிகள், சென்சார்கள் உள்ளிட்டைவை பொருத்தப்பட்டுள்ளன. மடிக்கணினி மூலம், வாகனத்தின் பிரேக், ஸ்டீயரிங், அக்சிலேட்டரை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.
இதற்கு பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார்( brushless DC electric motor), லித்தியம் அயனி வகை மின்கலம்(Lithium-ion battery) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால், 40 கி.மீ. தூரம் பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்ய நான்கு மணி நேரம் பிடிக்கும்.
இதுவே இந்தியாவின் முதல் மின்சார தானியங்கி நான்கு சக்கர வாகனம் என்று எம்ஐடி பேராசிரியர் பிரகாஷ் ஜோஷி தெரிவித்தார். இந்த வாகனத்தை புனே ஸ்மார்ட் சிட்டி, மெட்ரோ நிர்வாக அலுவலர்கள் பரிசோதித்தப் பின், விநியோகம் குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: மனித மூளை திசுக்களை வளர்க்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் & எம்ஐடி விஞ்ஞானிகள்!