ETV Bharat / bharat

இந்தியாவின் முதல் ஐவிஎஃப் 'Banni' எருமை பிறந்துள்ளது - பண்ணி (Banni) வகை எருமை

குஜராத் மாநிலம் சோம்நாத்தில் நாட்டின் முதல் ஐவிஎஃப் எருமை பிறந்துள்ளது.

Banni Buffalo
Banni Buffalo
author img

By

Published : Oct 23, 2021, 8:36 PM IST

ஐவிஎஃப்(IVF- In vitro fertilization) கருத்தரிப்பு முறையின் மூலம் இந்தியாவின் முதல் பண்ணி (Banni) வகை எருமை பிறந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் கால்நடை செயற்கை இனப்பெருக்க தொழில்நுட்ப முறை அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத்தின் சோம்நாத் மாவட்டத்தில் இருக்கும் தனேஜில் அமைந்துள்ள சுசீலா ஆக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த வினய் எல் வாலா என்ற விவசாயியின் வீட்டில் இது நிகழ்ந்துள்ளது.

2020 டிசம்பர் 15 அன்று குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு பயணம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, பண்ணி எருமை வகை குறித்து பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாளே, பண்ணி எருமைகளின் ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு திட்டமிடப்பட்டது.

வினய் எல் வாலாவின் சுசீலா அக்ரோ ஃபார்ம்ஸை சேர்ந்த மூன்று பண்ணி எருமைகளை ஐவிஎஃப் கருத்தரித்தல் முயற்சிக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு முதல் எருமைக் கன்று தற்போது பிறந்துள்ளது.

எருமைகளின் செயற்கைக் கருத்தரிப்பு முறையில் மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை அரசு மற்றும் விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். இதன் மூலம் கால்நடைகளின் எண்ணிக்கை நாட்டில் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: அயோத்தி சென்று ராமரை வழிபடும் கெஜ்ரிவால்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.