கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நவ. 26) எட்டாயிரத்து ஆயிரத்து 318 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பாதிப்பு, உயிரிழப்பு நிலவரம்
இதனால், மொத்த பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 45 லட்சத்து 63 ஆயிரத்து 749ஆக அதிகரித்துள்ளது. நேற்று (நவ. 26) மட்டும் தொற்றால் 465 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 67 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 39 லட்சத்து 88 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லட்சத்து ஏழாயிரத்து 19 ஆக உள்ளது.
தடுப்பூசி திட்ட நிலவரம்
இதுவரை, மொத்தம் 121 கோடியே 53 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன. இதில் 78 கோடியே 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 43 கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நேற்று ஒரே நாளில் 73 லட்சத்ததுக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்