நிதி மசோதா 2021 குறித்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பிஜு ஜனதா தளம் உறுப்பினர் அமர் பட்நாயக் பேசினார். அப்போது அவர், உலகின் பல்வேறு நாடுகள் அவர்களின் தனிநபர் வருமானத்தைவிட குறைந்த அளவில்தான் வரி கட்டுகின்றனர்.
இந்தியர்களோ இதற்கு மாறாக வருவாயைவிட வரியை அதிகமாகக் கட்டுகின்றனர். சீனா, ஜெர்மனி, அமெரிக்கா அகிய நாடுகளில் இந்த நிலைமை இல்லை. இந்த மோசமான வரி விதிமுறைகளை மத்திய அரசு மாற்ற வேண்டும்.
அத்துடன் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான நிதி பகிர்மானம் ஒழுங்குப்படுத்தப்பட்டு மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசு மாநிலங்களுக்கான பங்கீட்டை 30 விழுக்காடு குறைத்துள்ளது.
இது கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைத்து, வரி வருவாயின் பெரும் பங்கை மத்திய அரசின் பிடிகளில் கொண்டுசேர்த்துள்ளது.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா அரசு தார்மிக உரிமையை இழந்துவிட்டது: தேவேந்திர பட்னாவிஸ்