ETV Bharat / bharat

சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம்! நிப்டியும் புது உச்சம் தொட்டு வர்த்தகம்! - பங்கு சந்தை

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை வரலாறு காணாத அளவில் அதிகரித்து புது உச்சம் தொட்டு உள்ளது. சென்செக்ஸ் 63 ஆயிரத்து 601 புள்ளிகளும், நிப்டி 18 ஆயிரத்து 887 புள்ளிகளும் அதிகரித்து காணப்படுகின்றன.

Stock Exchange
Stock Exchange
author img

By

Published : Jun 28, 2023, 3:19 PM IST

மகாராஷ்டிரா : மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரலாறு காணாத அளவில் 63 ஆயிரத்து 601 புள்ளிகளை கடந்து புது உச்சம் தொட்டது.

இந்திய மொத்தம் இரண்டு பங்குச் சந்தை குறியீடுகள் உள்ளன. ஒன்று மும்பை பங்குச் சந்தை, மற்றொன்று தேசிய பங்குச் சந்தை. முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ப நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து பங்குச் சந்தை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த திங்கட்கிழமை வரை ஏற்ற இறக்கத்துடன் சென்று கொண்டு இருந்த பங்குச் சந்தை தற்போது சீரிய வேகத்தில் உயர்ந்து உள்ளது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 175 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 63 ஆயிரத்து 601 புள்ளிகள் என்ற புது உச்சத்தை தொட்டு உள்ளது. அதேபோல், தேசிய பங்குச் சந்தையான நிப்டியும் 60 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 18 ஆயிரத்து 887 புள்ளிகளை கடந்து அதிகபட்சத்தை தொட்டு உள்ளது.

அமெரிக்காவில் பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அந்நாட்டு மத்திய வங்கி காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடாதது, உக்ரைன் - ரஷ்யா போர், ரஷ்யாவின் உள்நாட்டு அத்துமீறல், மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட காரணங்களால், உலக முதலீட்டாளர்கள் பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது.

அதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்து, பங்குச்சந்தை லாபம் அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பங்குச் சந்தைகள் மூடபட வேண்டியது. ஆனால் மகாரஷ்டிர அரசு பக்ரீத் பண்டிகையை வியாழக்கிழமைக்கு மாற்றியமைத்ததால் பங்குச் சந்தைகள் தொடர்ந்து இயங்கின.

பக்ரீத் பண்டிகை மாற்றம் குறித்து மகாராஷ்டிர அரசு சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் தங்களது விடுமுறையை மாற்றி அமைத்து அறிவிக்கைகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஏர் இந்தியா- விஸ்தாரா விமான நிறுவனங்கள் இணைப்பு : இந்திய போட்டி ஆணையம் கெடுபிடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.