டெல்லி: இந்தியன் ரயில்வே 450 டன் ஆக்ஸிஜனை நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகித்துள்ளது. மேலும், ஆக்ஸிஜன் ஏற்ற ஆறு டேங்கர்கள் போக்ராவிலிருந்து போபாலுக்கு சென்றுள்ளதாக இந்தியன் ரயில்வே கூறியுள்ளது.
65 டன் ஆக்ஸிஜனை ஏற்றிக்கொண்டு சென்ற விரைவு ரயில் இன்று(ஏப்.27) காலை தலைநகர் டெல்லியை அடைந்தது. ஆக்ஸிஜன் சிலிண்டர், திரவநிலை ஆக்ஸிஜன் சிலிண்டரை விநியோகிக்க ஆக்ஸிஜன் விரைவு ரயிலை மேலும் சில நாட்கள் இயக்கவுள்ளதாகவும், இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
திரவநிலை ஆக்ஸிஜனை மருத்துப் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேகமாக பரவும் கரோனா இரண்டாம் அலை- எச்சரிக்கும் மருத்துவர்