டெல்லி :உலகின் வலிமையான பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 80வது இடம் கிடைத்து உள்ளது. லண்டனைச் சேர்ந்த ஹான்லி பாஸ்போர்ட் இண்டக்ஸ் என்ற நிறுவனம் உலக நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.
பயங்கரவாதம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து இந்த பாஸ்போர்ட் தரவரிசை வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை பிடித்து உள்ளது. முன்னதாக ஜப்பான் கடந்த் ஐந்து ஆண்டுகளான இந்த தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றி இருந்தது.
தற்போது ஜப்பானை பின்னுக்கு தள்ளி சிங்கப்பூர் முதலிடம் பிடித்து உள்ளது. ஜப்பான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்த பட்டியலில் 80வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இந்தியா 85வது இடத்தில் இருந்தது. தற்போது 5 இடங்கள் முன்னேறி 80வது இடத்தை பிடித்து உள்ளது.
இந்த தரவரிசையின் மூலம் இந்தியர்கள் முன்னதாகவே விசா பெறாமல் 57 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த 57 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, அதன் பின் அந்நாட்டின் அரசின் அனுமதி பெற்றுக் கொள்ளலாம். தற்போது வரை இந்தியர்கள் உலகளவில் 177 நாடுகளுக்கு செல்ல விசா கட்டாயமாக தேவைப்படுகிறது.
அதில் ரஷ்யா, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உள்ளன. மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி பூடான், நேபாளம், மாலத்தீவு, செனகல், சுரிநேம், மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விச இல்லாமல் சென்று வரலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், கென்யா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்ல இந்தியர்கள் பயணத்திற்கு முன்கூட்டியே விசா பெற அவசியமில்லை என்றும் அந்தந்த நாடுகளுக்கு சென்றபின் கூட விசா பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சிங்கப்பூரை தொடர்ந்து தரவரிசையில் இரண்டாவது இடத்தில் ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் ஏறத்தாழ 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறது. 3வது இடத்தில் உள்ள ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட்டை கொண்டு ஒருவர் உலகம் முழுவதும் உள்ள 182 இடங்களுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரியா, பின்லாந்து, பிரான்ஸ், லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. அமெரிக்கா 8வது இடத்தையும், பிரக்சிட் வெளியேற்றத்திற்கு பின்னர் பிரிட்டன் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறம் கண்டு 4வது இடத்தையும் பிடித்து உள்ளது.
இந்த தரவரிசையில் ஆப்கானிஸ்தான் 103வது இடத்திலும், ஏமன் 99வது இடத்திலும், பாகிஸ்தான் 100வது இடம், சிரியா 101வது இடம் மற்றும் ஈராக் 102வது இடத்திலும் உள்ளன. இதில் ஆப்கானிஸ்தான் பாஸ்போர்டை கொண்டு ஏறத்தாழ 27 நாடுகளுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடைசி இடங்களில் உள்ள நாடுகளில் முன்னர் தீவிரவாத நடவடிக்கைகள், பயங்கரவாத கிளர்ச்சிகள் முன்னர் நடந்ததை கொண்டு இந்த தரவரிசை வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Chamoli accident: கங்கை திட்ட பணியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்து - 15 பேர் பலி!