ETV Bharat / bharat

Turkey Earthquake:துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கி பலியான இந்தியரின் உடல் மீட்பு - Indian Man Recovered From Debris in Malatya

Turkey Earthquake:கடந்த பிப்.6 ஆம் தேதி துருக்கியில் நிலநடுக்கத்தினால் காணாமல் போன விஜய் குமார் பொக்ரியால் என்ற இந்தியரின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 11, 2023, 9:24 PM IST

Updated : Feb 11, 2023, 9:52 PM IST

Turkey Earthquake:கோட்வார்(உத்தரகாண்ட்): துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்த இந்தியாவை சேர்ந்தவரின் உடல், துருக்கியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் இடிபாடுகளுக்குள் இருந்து இன்று (பிப்.11) கண்டெடுக்கப்பட்டது. கடந்த பிப்.6 ஆம் தேதி சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தினால் இரண்டு நாடுகளும் முற்றிலுமாக உருக்குலைந்தன. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை இன்று வரை 24,000 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, அந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்த ஒரே இந்தியரான விஜய் குமார் பொக்ரியால்(35) என்பவரின் உடலை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில், கிழக்கு அனடோலியா நகரின் மாலத்யாவில் உள்ள அடுக்குமாடி ஹோட்டல் இடிபாடுகளில் அவரது உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது குடும்பத்தினர், மீட்புக் குழுவினருக்கு அனுப்பிய புகைப்படங்களினை அடிப்படையாகக் கொண்டு இடது கையில் பச்சை குத்தியிருந்த அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. பணியின் காரணமாக கடந்த ஜன.23 ஆம் தேதி துருக்கி நாட்டிற்கு இவர் சென்றதாக கூறப்படுகிறது. முன்னதாக, அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இந்த ஹோட்டலின் இடிபாடுகளிலிருந்து அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட உடைமைகள் கண்டெடுக்கப்பட்டு இருந்தன.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் Oxyplants India என்ற நிறுவனத்தில் எரிவாயு குழாய் நிறுவும் பொறியாளராக இவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயின் மூத்த சகோதரர் அருண் இதுகுறித்து கூறுகையில், ஓட்டலின் இடிபாடுகளில் இருந்து விஜயின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக துருக்கி தூதரகத்தில் இருந்து தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், விஜய் மறைந்ததில் இருந்து, தான் இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று அவரது உடலை இடிபாடுகளில் இருந்து மீட்ட நிலையில், மூன்று நாட்களில் உடல் இந்தியா வந்து சேரும் என்று தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்படும் உடல் சாலை வழியாக இஸ்தான்புல்லுக்கு கொண்டு வரப்படும் என அவர் மேலும் கூறினார்.

Last Updated : Feb 11, 2023, 9:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.