உக்ரைன் எல்லைப்பகுதிகளில் முதல்கட்டமாக இந்தியா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமானங்கள் மூலம் மாணவர்களை அழைத்து வர ஏற்பாடு நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் நடைபெற்று வரும் பகுதியை சுற்றியுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அவர்கள் கல்லூரி மற்றும் பயண ஏஜென்டுகள் தெரிவிக்கும் அறிவுரைகளை ஏற்று தங்களது பாஸ்போர்ட் இரண்டு கோவில் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உரிய வாகனங்களில் இந்திய கொடி அடங்கிய ஸ்டிக்கர்களை ஓட்டியபடி எல்லையோர பகுதிகளுக்கு விரைந்து வருமாறு இந்திய மாணவர்களுக்கு உக்ரைனில் உள்ள இந்தியன் எம்பஸ்ஸி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போர் நடைபெற்று வரும் இடத்தில பதுங்குகுழிகள் மூலம் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ள மாணவர்களை அடுத்த கட்டமாக மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உக்ரைனில் உள்ள மாணவர்களுக்கு இந்தியன் எம்பஸ்ஸி சார்பாக அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மாணவர் தரப்பில் இந்தியாவில் உள்ள பெற்றோருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும், கல்லூரி சார்பில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் மாணவர்கள் யாரும் இந்தியாவுக்கு ஊடகங்களுக்கு வெளியாகக் கூடிய வகையில் வீடியோ ஒளிப்பதிவு செய்து அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். உக்ரைன் நாட்டில் காலை 10 மணி நிலவரப்படி உக்ரைன் நாட்டு எல்லைப் பகுதியில் உள்ள கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் மட்டும் பாதுகாப்பாக இந்தியா அழைத்து வர ஏற்பாடுகள் நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: 27 நாட்டு தலைவர்களிடம் கேட்டேன்; எல்லாரும் அச்சப்படுகிறார்கள் - உக்ரைன் அதிபர் உருக்கமான உரை