பஞ்சாப் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் தேர்வில் நடைபெற்ற குளறுபடி குறித்து விசாரிக்க இந்திய ராணுவம் சிபிஐயை அணுகியுள்ளது. இந்தத் தேர்வை நடத்தும் தேர்வு மையத்தில் மோசடி நடைபெற்றதாகக் கூறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ராணுவம் தலையிட்டு முன்னதாக விசாரணை நடத்தியது.
ராணுவம் புலனாய்வு விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்தப் புகாரில் பல தரப்புகளின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணை சிபிஐ வசம் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊழலுக்கு துளி அளவும் இடமளிக்க முடியாது எனக் கூறிய இந்திய ராணுவம் சிபிஐ விசாரணைக்காக அனைத்து ஆவணங்களும் தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராணுவத் தளபதி முகுந்த் நரவனே அலுவலர்களிடம் நேரடியாகத் தலையிட்டு எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளாவில் 115 இடங்களில் பாஜக போட்டி: கூட்டணிக்கு 25 இடங்கள்