ராஜஸ்தான்: இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டம் அருகே விழுந்து விபத்துக்குள்ளானது. குப்பைகள் நிறைந்த பகுதியில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ மளமளவென சுற்றி பரவியது.
கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்த விவரம் இதுவரை தெரியவில்லை.
இதையும் படிங்க: மினி பேருந்து கவிழ்ந்து விபத்து; 15 பேர் காயம்