ஜம்மு: ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.
ந்நிலையில் ஜம்முவில் தங்கியிருந்த லடாக்கை சேர்ந்த 388 பேர், விமானப்படை விமானங்களில் பத்திரமாக லேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும், லடாக்கை சேர்ந்தவர்கள் விமானங்களில் ஏன் அனுப்பப்பட்டனர் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய விமானப்படை உதவியுள்ளது. விமானப்படையின் IL-76 ரக இரண்டு விமானங்கள் ஜம்மு விமானப்படை தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதில் ஆபரேஷன் சத்பவனா(நல்லெண்ணம்) அடிப்படையில், 388 பேர் லடாக்கின் லே பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரு யூனியன் பிரதேசங்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த உதவி வழங்கப்பட்டது"என கூறினார்.
இதையும் படிங்க: "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் விரும்புகிறது" - பூபேஷ் பாகல்!