ETV Bharat / bharat

இந்தியா உலகிற்கு வழிகாட்டும் - பிரதமர் மோடி

இந்திய சுதந்திரத்தின் அமிர்தகாலம், வளர்ச்சி மற்றும் பெருமையின் காலகட்டமாக மட்டுமல்லாமல், உலகிற்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் காலமாகவும் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

author img

By

Published : Dec 7, 2022, 3:23 PM IST

Narendra Modi Speaking in the Rajya Sabha

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று (டிசம்பர் 7) குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் மாநிலங்களவை சபாநாயகராக பொறுப்பேற்றார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. நாம் அமிர்தகாலப் பயணத்தை நோக்கி நடைபோட்டு வருகிறோம். இந்த அமிர்தகாலம், வளர்ச்சி மற்றும் பெருமையின் காலகட்டமாக மட்டுமல்லாமல், உலகிற்கு வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும் காலமாகவும் இருக்கும்.

இந்தியாவின் பங்களிப்பு உலகளவில் அதிகரித்து வரும் சூழலில், ஜி20 தலைமைத்துவத்தை நாம் பெற்றிருப்பது மிகப்பெரிய வாய்ப்பாகும். ஜி20 உச்சிமாநாடு வெறும் தூதரக ரீதியிலான நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், இந்தியாவின் திறனை உலக அரங்கில் முழுமையாக காட்சிப்படுத்தும் வாய்ப்பாக இருக்க வேண்டும். இந்தியாவைப் பற்றி, உலகம் அறிந்து கொள்ளவும், உலகம் முழுவதிலும் இந்தியா தனது ஆற்றலை பறைசாற்றவும் இது பெரிய வாய்ப்பாகும். அண்மையில் நான் அனைத்துக்கட்சி தலைவர்களுடன் விவாதித்தேன். அதனுடைய பிரதிபலிப்பு அவையிலும் நிச்சயமாக இருக்கும். இந்தியாவின் ஆற்றலை உலகுக்கு எடுத்துக்காட்டுவதற்கு அதே உணர்வு நாடாளுமன்றத்திலும் காணப்படுவது பயனுள்ளதாக இருக்கும்.

அனைத்து அரசியல் கட்சிகளும் மதிப்புமிக்க விவாதத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்து விவாதத்துக்கு புதிய வலுசேர்ப்பதுடன், நமது பாதையை மிகவும் தெளிவாக தேர்வு செய்ய உதவும் என நம்புகிறேன். நாடாளுமன்றத்தின் இந்த அமர்வில் எஞ்சிய காலத்திற்கு, அவைக்கு முதல் முதலாக புதிதாக வந்துள்ளவர்களுக்கு, புதிய எம்பிக்களுக்கு, இளம் எம்பிக்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க, அனைத்துக்கட்சித்தலைவர்களும், கட்சிகளின் அவைத் தலைவர்களும் முன் வர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் நடைபெற வேண்டியது முக்கியமானதாகும். மாநிலங்களவையில் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள குடியரசு துணைத் தலைவருக்கு இன்றைய முதல் நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவை பெருமை கொள்ளும் வகையில் செயல்படுவதோடு, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அவர் செயல்படுவார் என்றும் நான் நம்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இளம் எம்.பிக்கள் விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும்" - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.