ETV Bharat / bharat

India Vs New Zealand : 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! 2019 தோல்விக்கு பழிதீர்த்தது! இறுதி போட்டிக்கு தகுதி! - இந்தியா நியூசிலாந்து

India Enters World Cup Cricket 2023 Final : உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 15, 2023, 10:51 PM IST

மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் அதில், இந்தியா, தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 2019ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கண்ட தோல்விக்கு நியூசிலாந்து அணியை பழிதீர்க்க இந்திய வீரர்கள் மும்முரம் காட்டினர்.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மா மற்ற்ம் சுப்மான் கில் தொடங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா தனது பங்கிற்கு 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து சுப்மான் கில்லுடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை திணறடித்தார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினர். அபாரமாக விளையாடிய சுப்மன் கில் 79 ரன்கள் குவித்து இருந்த போது கால் பிடிப்பு பிரச்சினை காரணமாக ரிட்டயர்ட் ஹார்ட் கொடுத்து ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலியுடன் கூட்டணி அமைத்தார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி நியூசிலாந்து பந்துவீச்சை விளாசி தள்ளியது. அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்தார். மறுமுனையில் தனது ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 50வது சதத்தை பூர்த்தி செய்தார்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்து புது உலக சாதனை படைத்தார். சதம் விளாசிய விராட் கோலி (117 ரன்) சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தண்ணி காட்டி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் (105 ரன்) சதம் விளாசிய கையோடு அவுட்டாகி வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஒரு ரன் மட்டும் எடுத்து வந்த வேகத்தில் நடையை கட்டினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுல் 39 ரன்களும், சுப்மன் கில் 80 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 10 ஓவர்கள் ப்ந்து வீசி 100 ரன்களை தாரைவார்த்தார். அவரைத் தொடர்ந்து டிரென்ட் பவுல்ட் 10 ஓவர்கள் பந்துவீசி 86 ரன்கள் வாரி வழங்கினார். 50 ஓவர்களில் 398 ரன்கள் எடுத்தால் மட்டுமே இறுதி போட்டிக்கு செல்ல முடியும் என்ற நிலையில் நியூசிலாந்து களமிறங்கியது.

நியூசிலாந்து அணி முதல் விக்கெட்டுக்கு 30 ரன்கள் சேர்த்தது. டிவென் கான்வாய் 13 ரன் அவரைத் தொடர்ந்து அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 13 ரன் என அடுத்தடுத்து முகமது ஷ்மி பந்துவீச்சில் ஆட்டம் இழ்ந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன், டேரி மிட்செல் ஜோடி நிதானமாக விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களை அச்சுறுத்தி வந்தது.

இந்த ஜோடியை பிரிக்க பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். அபாரமாக விளையாடிய கேன் வில்லியம்சனை (69 ரன்) முகமது ஷ்மி அவுட்டாகினார். ஒரு புறம் நியூசிலாந்து அணியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் மறுபுறம் டேரி மிட்செல் சதம் அடித்து அணியை மீட்க போராடிக் கொண்டு இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக கிளென் பிலிப்ஸ் (41 ரன்), மிட்செல் சான்டனர் (9 ரன்) ஆகியோர் விளையாடினர். இறுதியில் அதே முகமது ஷமி பந்துவீச்சில் டேரில் மிட்செல் 134 ரன்கள் குவித்து ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாரமாக பீல்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா முக்கிய கட்டத்தில் அடுத்தடுத்து 3 கேட்ச்களை பிடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

இறுதியில் 48 புள்ளி 5 ஓவர்கள் முடிவில் 327 ரன்களுக்கு நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சீராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நாளை (நவ. 16) நடைபெறும் இரண்டாவது அரைஇறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியுடன் வரும் நவம்பர் 19ஆம் தேதி இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்கும். 7 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதையும் படிங்க : LIVE : IND VS NZ: இந்திய அணி அபார வெற்றி! இறுதிப் போட்டிக்கு தகுதி!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.