ஹைதராபாத்: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 548ஆக அதிகரித்ததையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88 லட்சத்து 45 ஆயிரத்து 127ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 82 லட்சத்து 49 ஆயிரத்து 579 பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 435 பேர் உயிரிழந்ததையடுத்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 70ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொற்றிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதையடுத்து குணமடைந்தவர்களின் விழுக்காடு 93.27ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விழுக்காடு 1.47ஆக உள்ளது.
ஐசிஎம்ஆரின் தகவல்படி, நேற்று ஒரே நாளில் எட்டு லட்சத்து 61 ஆயிரத்து 706 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், இதன் காரணமாக நாட்டில் பரிசோதனை மேற்கொண்ட நபர்களின் எண்ணிக்கை 12 கோடியே 56 லட்சத்து 98 ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையும் படிங்க: 'அனுஷ்கா தனது நாயை கட்டுப்படுத்த தேவையில்லை'- விராத் கோலிக்கு காங்கிரஸ் ஆதரவு!