ETV Bharat / bharat

செயற்கை நுண்ணறிவு: உலகளாவிய கூட்டாண்மையின் தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது - செயற்கை நுண்ணறிவு கூட்டாண்மையில் இந்தியா

ஜி20 உச்சி மநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் தலைமை பொறுப்பையும் இந்தியா ஏற்க உள்ளது.

India to take over as chair of Global Partnership on Artificial Intelligence

author img

By

Published : Nov 21, 2022, 3:19 PM IST

டோக்கியோ: இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இதில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா வரும் டிசம்பர் 1ஆம் தேதி ஏற்கவுள்ளது.

இந்த பொறுப்பையேற்ற பிறகு, செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மையின் தலைமை பொறுப்பையும் ஏற்க உள்ளது. இந்த சர்வதேச கூட்டாண்மையின் தலைமைப் பொறுப்பு, மனிதகுல மேம்பாட்டிற்காகவும், செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப செயல்பாட்டினை ஊக்குவிற்பதற்காகவும் பயன்படும். செயற்கை நுண்ணறிவுத்துறை மூலம் வரும் 2035ஆம் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்திற்கு 967 பில்லியன் டாலர்களையும், 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 450-500 பில்லியன் டாலர்களையும் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நாட்டின் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கில் 10 சதவீதமாகும்.

இந்த கூட்டாண்மை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, கொரியா குடியரசு மற்றும் சிங்கப்பூர் உட்பட 25 உறுப்பு நாடுகள் கொண்ட சபையாகும். இந்தியா 2020ஆம் ஆண்டு இந்தக் குழுவில் உறுப்பினராக சேர்ந்தது.

டோக்கியோவில் இன்று (நவம்பர் 21) நடைபெறும் செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை கூட்டத்தில் மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுக்கான இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொள்கிறார். அவரிடம் தற்போது தலைமைப்பொறுப்பில் உள்ள பிரான்ஸ் நாடு பொறுப்பை ஒப்படைக்கிறது. அதன்பின் டிசம்பரில் அதிகாரப்பூர்வமாக தலைவராக பொறுப்பேற்கும். இந்த கவுன்சில் தலைமைக்கான தேர்தலில், இந்தியா மூன்றில் இரண்டு பங்கு முதல் முன்னுரிமை வாக்குகளைப் பெற்றிருந்தது. அதே நேரத்தில் கனடாவும் அமெரிக்காவும் அடுத்த இரண்டு சிறந்த இடங்களைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்வதேச அணுசக்தி கண்காட்சி... இந்தியர்கள் பங்கேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.