இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்துவருவதால் பல்வேறு மருத்துவமனைைகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் திறன் இருந்தாலும், அதை சேமித்து வைக்கும் டேங்கர்கள், கண்டெய்னர்கள் போன்ற உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இந்த சிக்கலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த பிரச்னையை சமாளிக்க ஜெர்மனியின் உதவியை இந்தியா தற்போது நாடியுள்ளது. அந்நாட்டிலிருந்து தேவையான உபகரணங்களை விமானங்கள் மூலம் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.
இதற்காக விமானப்படை வீரர்களை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பணியமர்த்தியுள்ளார். மேலும், பல்வேறு ராணுவ அமைப்புகளை போர் கால அடிப்படையில் பணியாற்ற பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு ஐநா அழைப்பு