ETV Bharat / bharat

பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்... 26 ரபேல் விமானங்கள் கொள்முதல்? பிளான் என்ன? - ரபேல் விமானம்

பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது இந்திய ராணுவத்திற்கு மேலும் 26 ரபேல் விமானங்கள் மட்டும் கடற்படைக்கு 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்களை கொள்முதல் செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Rafale
Rafale
author img

By

Published : Jul 10, 2023, 8:26 PM IST

டெல்லி : பிரான்சிடம் இருந்து 26 ரபேல் போர் விமானம் மற்றும் 3 நீர் மூழ்கிக் கப்பல்களை வாங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பாதுகாப்புத் துறைகள், மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இந்த முன்மொழிவுகளை தாக்கல் செய்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த முன்மொழிவின் மூலம் இந்திய கடற்படைக்காக 22 ஒற்றை இருக்கை கொண்ட ரபேல் கடற்படை விமானம் மற்றும் 4 பயிற்சி விமானங்களை கொள்முதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் 14ஆம் தேதி பிரான்ஸ் தேசிய தினம் எனப்படும் பாஸ்டில் தினத்தையொட்டி, சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரோன், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்து உள்ளார். பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் செல்கிறார்.

அந்த சுற்றுப் பயணத்தின் போது ஏறத்தாழ 90 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரான்சிடம் இருந்து ஏற்கனவே 35 ரபேல் போர் விமானங்களை இந்தியா வாங்கியுள்ள நிலையில், மேலும் 26 ரபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய கடற்படைக்காக 22 ஒற்றை இருக்கை கொண்ட ரபேல் கடற்படை விமானம், 4 பயிற்சி விமானம் மற்றும் 3 ஸ்கார்பீன் வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் செய்யும் ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாட்டின் எல்லையோர பகுதியில் நிலவும் பாதுகாப்பு பற்றாக்குறையின் காரணமாக இந்த போர் விமானங்கள், மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளதாக பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விமானம் தாங்கி போர்க் கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யாவில் மிக்-29s வகை போர் விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், ரபேல் விமானங்களின் தேவை ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் மேக் இன் இந்தியா திட்டத்தில் கடற்படைக்கு தேவையான 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை பிராஜெக்ட் 75 திட்டத்தில் மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் கட்டமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : டெல்லி அவசர சட்டம்: இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு... ஆம் ஆத்மி அரசுக்கு பின்னடைவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.