ETV Bharat / bharat

பாரத் பந்த்: பாஜகவின் கிழக்கிந்திய கம்பெனி மனநிலையை தோலுரித்துக் காட்டுகிறது!

நாட்டின் விவசாயத் துறையை அழிக்கும் பாஜக அரசின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்த இன்றைய 'பாரத் பந்த்' மிகவும் அவசியம் எனவும், அதற்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது எனவும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயவீர் ஷெர்கில் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயவீர் ஷெர்கில்

author img

By

Published : Sep 27, 2021, 5:04 PM IST

டெல்லி: மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் முழு அடைப்பிற்கு (பாரத் பந்த்) விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. குறிப்பாக, சம்யுக்த கிசான் மோர்ச்சா என்ற அமைப்பு இந்த போராட்டத்தை முன்னின்று நடத்துகிறது.

இந்த போராட்டம் தலைநகர் டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்று வருகிறது. ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஓராண்டு காலமாக தீவிரமாக போராடி வருகின்றனர்.

அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்

மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவை முன்னிட்டு விவசாயி சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை இன்று மீண்டும் உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறியதாவது, "கொடுங்கோன்மைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கும், விவசாயிகளின் இந்த விடாமுயற்சியை ஆதரிப்பதற்கும் பாரத் பந்திற்கு இந்த நாட்டின் ஒவ்வொரு நபரும் ஆதரவளிக்க வேண்டும். நம் நாட்டில் விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் பாஜக அரசின் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்றைய பாரத் பந்த் மிகவும் அவசியமானது.

ஜெயவீர் ஷெர்கில் பேச்சு

அரசின் 'கிழக்கிந்திய கம்பெனி' மனநிலை

புதிய நாடாளுமன்ற கட்டுமானத்தை ஆய்வு செய்ய பிரதமர் செல்ல முடியும்போது, அவர் ஏன் டெல்லி எல்லைகளுக்குச் சென்று விவசாயிகளைச் சந்தித்து அவர்களின் பிரச்னைகளைக் கேட்க மறுக்கிறார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையுயர்வே வணிகம், வேலையின்மை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. விவசாயிகள் தங்களின் போராட்டத்தில் இருந்து சிறிதும் விலகவில்லை. பாஜக அரசின் 'கிழக்கிந்திய கம்பெனி' மனநிலையை தோலுரித்துக்காட்டும் இப்போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது" என்றார்.

முன்னதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் ஒன்றை வெளியிட்டார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பாரத் பந்த் காரணமாக தேசிய நெடுஞ்சாலை முடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.