ETV Bharat / bharat

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா! - நிலநடுக்கம்

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு , இந்தியா 27 டன் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வழங்கி இருக்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா
ஆப்கானிஸ்தானுக்கு உதவி
author img

By

Published : Jun 24, 2022, 7:41 PM IST

டெல்லி: கடந்த 22ஆம் தேதி ஆப்கானிஸ்தானின், கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் விதமாக இந்தியா 2 விமானங்களில் , 27 டன் அளவிலான நிவாரண மற்றும் மருத்துவப் பொருட்களை காபூலுக்கு அனுப்பி உள்ளது. கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், தூங்கும் பாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

India sends earthquake relief assistance to Kabul
ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா

இந்தப் பொருட்கள் அனைத்தும் அந்நாட்டு தாலிபான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் தேர்தல் - வேட்பு மனுதாக்கல் செய்தார் திரெளபதி முர்மு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.