ETV Bharat / bharat

இந்தியாவில் குறைந்துவரும் கரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமும் 94.91 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

கரோனா பாதிப்பு
கரோனா பாதிப்பு
author img

By

Published : Feb 2, 2022, 11:07 AM IST

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 386 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 733 பேர் கரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி நாடு முழுவதும் 16 லட்சத்து 21 ஆயிரத்து 603 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 109 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை மூன்று கோடியே 95 லட்சத்து 11 ஆயிரத்து 307 ஆக உயர்ந்துள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரின் விகிதம் 94.91 விழுக்காடாக அதிகரித்துள்ளது. மேலும், 167.29 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாணவர்கள் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் - மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.