ETV Bharat / bharat

காலிஸ்தான் தலைவர் கொலை: இந்தியாவுக்கு தொடர்பு? கனடாவின் கருத்துக்கு இந்தியா மறுப்பு! பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 1:18 PM IST

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, இந்திய உயர்மட்ட தூதரக அதிகாரி வெளியேற்றியதை அடுத்து கனடாவின் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்திய உயர்மட்ட தூதரக அதிகாரி வெளியேற்றம்..கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா

டெல்லி: கனடாவில் காலிஸ்தான் இயக்கத்தை ஊக்குவித்த சீக்கிய ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணையில், கனடாவின் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.

வடமேற்கு இந்தியாவிலிருந்து சுதந்திரமான பஞ்சாப் உருவாக வேண்டும் என்று விரும்பும் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கு கனடா அரசு உதவி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கனடா அரசை கண்டித்து, இந்திய அதிகாரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஜூன் 18 அன்று கனடாவின் சர்ரே, பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள குருத்துவாரா கோவிலுக்கு வெளியே காலிஸ்தான் இயக்கத்தை ஊக்குவித்த சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் பிரிவினையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கனடா அரசு இந்திய உயர்மட்ட தூதரக அதிகாரியை வெளியேற்றியுள்ளது. கனடா அரசு இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியது தொடர்பாக வெளிவிவகார அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானதாகும். கனேடிய பிரதமரின் அறிக்கையை நாங்கள் பார்த்தோம்.

அவற்றை நாங்கள் நிராகரிக்கின்றோம், அதே போல் அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் பார்த்தோம். காலிஸ்தான் இயக்கத்தை ஊக்குவிக்கும் சீக்கிய ஆர்வலர்களுக்கு கனடாவில் அடைக்கலம் அளித்து அந்நாட்டு அரசு இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறது.

கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் குற்றங்கள் உட்பட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பது புதியதல்ல" இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது. இது குறித்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ "இந்திய அரசின் உயர்மட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கனடா தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

மேலும், டெல்லியில் நடந்த ஜி 20 மாநாட்டில், இச்சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறினேன். கனேடிய குடிமகனாகப் பணியாற்றிய ஒருவரைக் கொன்றது, இந்திய அரசாங்கத்தின் முகவர்கள் என்று தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருக்கிறது.

கனேடிய மண்ணில் கனேடிய குடிமகன் ஒருவரைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். இது சுதந்திரமான மற்றும் ஜனநாயக சமூகங்கள் தங்களை நடத்தும் அடிப்படை விதிகளுக்கு முரணானது. கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, இந்தியாவின் உளவுத்துறையின் தலைவரை வெளியேற்றியுள்ளார்" என்று கூறினார்.

அதனைத்தொடர்ந்து, வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி பேசியதாவது, "இச்சம்பவம் ஒருவருக்கொருவர் எவ்வாறு கையாள வேண்டும் என்ற அடிப்படையான விதிகளை மீறியுள்ளது. இதன் விளைவாக நாங்கள் உயர்மட்ட இந்திய இராஜதந்திரியை வெளியேற்றியுள்ளோம். சம்பவம் தொடர்பாக ஜஸ்டின் ட்ரூடோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனிடம் கூறியுள்ளார்" என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடியுடன் சந்திப்பிற்குப் பிறகு கனடா அரசு, அக்டோபரில் திட்டமிட்டிருந்த இந்தியாவிற்கான வர்த்தகப் பயணத்தை ஒத்திவைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, உலக சீக்கிய அமைப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடைய நபர்களை, கனடா உடனடியாக அடையாளம் கண்டு நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். தற்போது கனடாவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.

இதையும் படிங்க: சீனாவால் தமிழகத்திற்கு வரும் சிக்கல்.. இலங்கை உதவுகிறதா? - ராமதாஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.