டெல்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,593 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, 44 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இது முந்தைய நாள் பதிவான 2,527 கரோனா தொற்றை விட சற்று அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இன்று(ஏப். 24) தெரிவித்துள்ளது.
இதுவரை கரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,22,193 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,755 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். ஆக நாட்டில் இதுவரை மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,25,19,479 ஆகும்.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 4,36,532 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு, ஒட்டுமொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 83.47 கோடியாக அதிகரித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 2.65 கோடிக்கும் அதிகமான இளம் பருவத்தினருக்கு கோவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: '18ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!'