டெல்லி: மத்திய சுகாதரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 935 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. புதியதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தற்போது 1 லட்சத்து 44 ஆயிரத்து 264 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4 கோடியே 3 லட்சத்து 67 ஆயிரத்து 534 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கரோனா பாஸிட்டிவ் விகிதம் 0.33 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 51 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் 16,069 குணமடைந்துள்ளனர். நேற்று 2 லட்சத்து 61 ஆயிரத்து 470 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,46,671 கரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. மேலும், நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 200 கோடி தடுப்பூசிகள் (92.61 கோடி இரண்டாவது டோஸ்கள் மற்றும் 5.67 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்கள்) வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மழைக்கால கூட்டத்தொடர்: திறந்த மனதுடன் விவாதிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்