டெல்லி : நாடு முழுக்க தினந்தோறும் கரோனா பாதிப்பு பரவல் 0.29 சதவீதம் ஆக உள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கோவிட் பாதிப்பு குறித்த புள்ளிவிவர அறிக்கை இன்று (மார்ச் 28) வெளியானது.
அதில், “கடந்த 24 மணி நேரத்தில் 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தற்போது 0.04 சதவீத கோவிட் பாதிப்பாளர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வாராந்திர பரவல் 0.26 சதவீதம் ஆகவும், தினந்தோறும் பாதிப்பு 0.29 சதவீதம் ஆகவும் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து 1,567 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 98.75 சதவீதம் ஆக உள்ளது. நேற்று மட்டும் 4 லட்சத்து 32 ஆயிரத்து 389 பேருக்கு கோவிட் பெருந்தொற்று சோதனை செய்யப்பட்டது.
நாட்டில் இதுவரை 183.26 கோடி கோவிட் டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 12-16 வயதுக்குள்பட்ட பதின்ம வயது இளைஞர்களுக்கு தடுப்பூசி திட்டம் மார்ச் 16ஆம் தேதி முதல் போடப்பட்டுவருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம்; கண்காணிக்க தனிக்குழு - ராதாகிருஷ்ணன்