கோவிட்-19 தினசரி நிலவரம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை(Ministry of Health and Family Welfare ) அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் (நவ. 22) ஏழாயிரத்து ஆயிரத்து 919 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மொத்தமாக பாதித்தவர்களின் எண்ணிக்கை(Covid cases) மூன்று கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 480ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (நவ. 22) மட்டும் தொற்றால் 236 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை நான்கு லட்சத்து 66 ஆயிரத்து 147 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 ஆயிரத்து 202 நபர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இதன்மூலம், கரோனா தொற்று முடிந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 39 லட்சத்து 46 ஆயிரத்து 749 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை, மொத்தம் 117 கோடியே 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ளன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதில் 77 கோடியே மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசியும், 40 கோடியே 76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: Galwan Valley clash: தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு வீர் சக்ரா விருது!