டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று நேற்றைவிட சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், நேற்று (பிப். 15) இந்தியா முழுவதும் 30 ஆயிரத்து 615 பேர் புதிதாக கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரே நாளில் நாடு முழுவதும் 514 பேர் கரோனா தொற்றால் இறந்துள்ளனர். இதையடுத்து நாட்டின் மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து ஒன்பதாயிரத்து 872ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது மூன்று லட்சத்து 70 ஆயிரத்து 240 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதுவரை இந்தியா முழுவதும் 75.42 கோடி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 12 லட்சத்து 51 ஆயிரத்து 677 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்தமாக 173.86 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 41 லட்சத்து 54 ஆயிரத்து 476 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: ராகுல் காந்தி பிறப்பு குறித்து அவதூறு: அசாம் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு