இந்தியாவிலிருந்து சர்வதேச நாடுகளுக்கான பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்துத்துறை இயக்குனரகம்(DGCA-Directorate General of Civil Aviation) உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம் கார்கோ செயல்பாடுகள், டிஜிசிஏவால் சிறப்பு ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானங்கள், சர்வதேச நாடுகளுடன் ஏர் பபுல் ஒப்பந்தம் செய்யப்பட்ட விமானங்கள் ஆகியவற்றுக்கு இந்த தடை பொருந்தாதது எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடைக்குப்பின் அரசு வந்தே பாரத் திட்டத்தின் மூலம் பல நாடுகளுக்கு தேவைக்கேற்ப விமான சேவையை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது.
மேலும், பல்வேறு நாடுகளுடன் ஏர் பபுல் ஒப்பந்தம் மூலம் தேவைக்கேற்ப விமான சேவையை அரசு செய்து வருகிறது. நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த நிலையில், ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தடையானது மீண்டும் தொடரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: HOROSCOPE: ஜனவரி 20 ராசிபலன் - இன்று நல்லது நடக்குமா?