ETV Bharat / bharat

150 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஏற்றுமதி செய்துள்ளோம்’ - ஹர்ஷ் வர்தன் பெருமிதம் - national news

இதுவரை 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்துள்ளதாகவும், 7.5 கோடி டோஸ்கள் மருந்து தற்போது கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ் வர்தன்
ஹர்ஷ் வர்தன்
author img

By

Published : Apr 5, 2021, 11:50 AM IST

டெல்லியில் உள்ள சர்வதேச இந்திய மையத்தில் நடைபெற்ற ’ஏஜ் கேர் இந்தியா’ (Age Care India) முதியோர் அமைப்பின் 40ஆவது ஆண்டு விழாவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "ஒரே ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தொடங்கி தற்போது நாடு முழுவதும் 2,000 ஆய்வகங்கள் என்பது வரை இந்தியா நீண்ட தூரம் பயணித்துள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை நாம் ஏற்றுமதி செய்துள்ளோம். அதே நேரத்தில் 7.5 கோடி டோஸ்கள் மருந்து நம்மிடம் இருப்பில் உள்ளது. 6.5 கோடி டோஸ்களுக்கும் மேற்பட்ட மருந்து பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது” என்றார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ஒருவகை மலேரியா எதிர்ப்பு மருந்து ஆகும். இது முடக்கு வாதம், லூபஸ் போன்ற நோய்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. சென்ற ஆண்டு கரோனா தொற்று பரவத் தொடங்கிய சமயத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து இறப்பு விகிதத்தை கணிசமாகக் குறைப்பதாக தகவல் பரவத் தொடங்கியது.

இதனை அடுத்து பல்வேறு நாடுகளும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை இருப்பு வைத்துக் கொள்ளவும், இறக்குமதி செய்யவும் தொடங்கின.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் (HCQ) மருந்து உற்பத்தியாளர் ஆகும். உலகின் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் விநியோகத்தில் 70 விழுக்காட்டினை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சென்ற ஆண்டு, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்தியாவிலிருந்து 50 மில்லியன் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்நிலையில், மக்கள் பலரும் மருத்துவர் பரிந்துரையின்றி இம்மருந்தினை பயன்படுத்தத் தொடங்கியதை அடுத்து, மருத்துவர்களிடம் முறையான ஆலோசனை பெறாமல் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைக் எடுத்துக்கொள்ளக் கூடாது என உலக சுகாதார அமைப்பு முன்னதாக எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' குறித்து அறிவோம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.