டெல்லி: நில நடுக்கத்தால் மிக கொடூரமான சேதங்களை சந்தித்துள்ள துருக்கிக்கு, முதல் தவணை நிவாரண பொருட்களை இந்தியா அனுப்பியது. துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று (பிப்.6) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமி குலுங்கியதில் நூற்றுக்கண வானுயர் கட்டடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின.
கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி ஏறத்தாழ 4 ஆயிரம் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே குவியல் குவியலாக கிடக்கும் மக்களின் சடலங்களை மீட்கும் பணியில் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். தரைமட்டமான கட்டடங்களுக்கு இடையேப் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரவை செயலாளர், பல்வேறு அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் துருக்கிக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. நிவாரணப் பொருட்களுடன் 100 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுக்களை துருக்கிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிரதமரின் முதன்மை செயலாளர் பி.கே.மிஸ்ரா "மருத்துவர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை துருக்கிக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ளதாகவும் துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, முதற்கட்ட நிவாரண பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. இந்திய விமானப் படையின் விமானத்தில், நிவாரணப் பொருட்கள், திறமை வாய்ந்த தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த அண் மற்றும் பெண்கள், அதிக மோப்பத் திறன் கொண்ட நாய் படைகள், மருந்துப் பொருட்கள், அதிநவீன துளையிடும் இயந்திரங்கள், உள்ளிட்ட்ட பொருட்கள் விரைந்தன.
-
India's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action.
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1Gr
">India's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action.
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023
The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1GrIndia's Humanitarian Assistance and Disaster Relief (HADR) capabilites in action.
— Arindam Bagchi (@MEAIndia) February 6, 2023
The 1st batch of earthquake relief material leaves for Türkiye, along with NDRF Search & Rescue Teams, specially trained dog squads, medical supplies, drilling machines & other necessary equipment. pic.twitter.com/pB3ewcH1Gr
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் அரிந்தம் பாக்சி, "இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை துருக்கிக்கு அனுப்பும் பணிகள் நடைபெற்றன. தேசிய பேரிடர் மீட்பு படை (NDRF) மற்றும் மீட்புக் குழுக்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்ப் படைகள், மருத்துவப் பொருட்கள், துளையிடும் இயந்திரங்கள் மற்றும் பிற தேவையான உபகரணங்களுடன், நிலநடுக்க நிவாரணப் பொருட்களின் முதல் தவணை துருக்கிக்கு அனுப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: துருக்கிக்கு இந்தியா உதவிக்கரம்: விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப் படை!