ETV Bharat / bharat

இந்தியா அமைதியை விரும்பும் நாடு - ராஜ்நாத் சிங் - எல்லை பிரச்னை

டெல்லி: இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதியாக உள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியா அமைதியை நேசிக்கும் நாடு -ராஜ்நாத் சிங்

author img

By

Published : Nov 5, 2020, 4:12 PM IST

Updated : Nov 5, 2020, 4:18 PM IST

தேசிய பாதுகாப்புக் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கருத்தரங்கில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைத் தகராறு பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் தீர்ப்பதற்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது. எல்லைகளில் அமைதியைப் பேணுவதற்கான பல்வேறு ஒப்பந்தங்களை மதிக்க உறுதிபூண்டுள்ளது.

இருப்பினும், அத்துமீறல், ஆக்கிரமிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதியாக உள்ளது.

இந்தியா அமைதி விரும்பும் நாடு. வேறுபாடுகள் சர்ச்சையாக மாறக்கூடாது என்று இந்திய நம்புகிறது.

போரைத் தடுக்கும் திறன் மூலம் மட்டுமே அமைதியை உறுதிசெய்ய முடியும். பயங்கரவாதத்தை ஒரு மாநிலக் கொள்கையாகப் பயன்படுத்துவதில் பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதமாக இருந்துவருகிறது" எனக் கூறினார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் கடந்த மே 6ஆம் தேதி தொடங்கியது. இதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தீர்க்க இரு தரப்பினரும் தொடர்ச்சியான ராஜதந்திர, ராணுவ பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றனர். இருப்பினும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எட்டாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (நவ. 06) நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

Last Updated : Nov 5, 2020, 4:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.