டெல்லி: இந்தியாவில் கரோனா கணிசமாக குறைந்த வேளையில் திடீரென சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, "கடந்த 24 மணி நேரத்தில் 3,545 பேர் கரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 94 ஆயிரத்து 938 ஆக உயர்ந்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் நேற்று ஒரே நாளில் 27 பேர் தொற்றால் இறந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 2 ஆக அதிகரித்துள்ளது. ஏறத்தாழ 31 பேர் ஒரு நாளில் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர் எனவும் மத்திய சுகாதரத் துறை தெரிவித்துள்ளது. நேற்று (மே 5) கேரளாவில் 26 பேரும், திரிபுராவில் ஒருவரும் கரோனாவிற்கு பலியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:செங்கல்பட்டு தனியார் மருத்துவக் கல்லூரியில் 25 மாணவர்களுக்கு கரோனோ