நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 354 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 37 லட்சத்து 91 ஆயிரத்து 61ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்து 455 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 30 லட்சத்து 68 ஆயிரத்து 599ஆக அதிகரித்ததுள்ளது.
இதையடுத்து கடந்த 24 மணிநேரத்தில் 234 பேர் தொற்று காரணமாக ஒரேநாளில் உயிரிழந்தனர். இதனால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 573ஆக அதிகரித்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின்கீழ், நாட்டில் இதுவரை 89 கோடியே 74 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அக்டோபர் ஒன்று வரை 56 கோடியே 57 லட்சத்து 30 ஆயிரத்து 31 பேரின் சளி உள்ளிட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நேற்று (அக்டோபர் 1) மட்டும் ஒரே நாளில் 13 லட்சத்து 21 ஆயிரத்து 780 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: அண்ணல் காந்தியடிகள் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை!