ஹைதராபாத் : நாட்டில் 37 ஆயிரத்து 875 பேருக்கு கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 30 லட்சத்து 96 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிகப்பட்சமாக கேரளத்தில் 25 ஆயிரத்து 772 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 369 கரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதுவரை கரோனா வைரஸிற்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 411 பேர் உயிரிழந்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதுவரை 70.75 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 53 கோடியே 31 லட்சத்து 89 ஆயிரத்து 348 பேருக்கு சளி உள்ளிட்ட மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை (செப்.7) மட்டும் 15 லட்சத்து 26 ஆயிரத்து 56 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டன.
அன்றைய தினம் புதிதாக 31 ஆயிரத்து 222 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 290 பேர் உயிரிழந்திருந்தனர்.
இதையும் படிங்க : 1 முதல் 8ஆம் வகுப்பு - பள்ளிகள் திறப்பது குறித்து ஆய்வு