புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42 ஆயிரத்து 766 நபர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 673ஆக உள்ளது.
மேலும் 38 ஆயிரத்து 91 நபர்கள் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 92ஆக உள்ளது. இதனால் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.42 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 308 நபர்கள் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நான்கு லட்சத்து 40 ஆயிரத்து 533ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் பதிவாகியுள்ள 42 ஆயிரத்து 766 புதிய கரோனா பாதிப்புகளில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 682 பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 142 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
தடுப்பூசி நிலவரம்
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாட்டில் இதுவரை 68 கோடியே 46 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை மொத்தம் 53 கோடியே 58 ஆயிரத்து 218 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நேற்று (செப்.04) ஒரே நாளில் 17 லட்சத்து 47 ஆயிரத்து 476 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் நிபா: கேரளாவில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு