நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தும் குறைந்தும் வருகிறது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதி 25 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில், நேற்று (ஆக.17) ஒரேநாளில் 35 ஆயிரத்து 178 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
நாட்டில் பதிவாகும் கரோனா பாதிப்பு குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 22 லட்சத்து 85 ஆயிரத்து 857ஆக உள்ளது.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை
கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 169 பேர் குணமடைந்த நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்தை 923ஆக அதிகரித்துள்ளது. தற்போது மூன்று லட்சத்து 67 ஆயிரத்து 415 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
உயிரிழப்பு எண்ணிக்கை
நாட்டில் நேற்று (ஆக.17) மட்டும் 437 நபர்கள் உயிரிழந்தனர். இதுவரை மொத்த உயிரிழப்பு நான்கு லட்சத்து 32 ஆயிரத்து 519ஆக உள்ளது.
முதலிடத்தில் கேரளா
நாட்டில் அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் நேற்று (ஆக.17) 21 ஆயிரத்து 613 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 56 கோடியே ஆறு லட்சத்து 52 ஆயிரத்து 30 பேருக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ISIS ஆதரவு பெண்கள் கேரளாவில் கைது