டெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 65ஆயிரத்து 553 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 3,460 பேர் உயிரிழந்துள்ளனர்.
நான்காவது நாளாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 76 ஆயிரத்து 309 ஆக உள்ளது. இதனை சேர்த்து, மொத்தம் 2 கோடியே 54 லட்சத்து 54 ஆயிரத்து 320 பேர் குணமடைந்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நேற்று (மே.29) மட்டும் 30 லட்சத்து, 35 ஆயிரத்து 749 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரையில் மொத்தம் 21 கோடியே 20 லட்சத்து 66 ஆயிரத்து 614 பேர் கரோனா தொற்றுக்குத் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அறிக்கைபடி, இதுவரை 34 கோடியே, 31 லட்சத்து 83 ஆயிரத்து 748 பேருக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று(மே.29) மட்டும் 20 லட்சத்து 63 ஆயிரத்து 839 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.